Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro போன், Cyber Mecha வடிவமைப்பு, 16GB RAM, 260W சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் கேமிங் கிட் ஆகியவற்றுடன் பட்ஜெட் விலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை உலுக்கி வருகிறது.

{getToc} $title={Table of Contents}

Infinix பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் போன்களின் அதே அம்சங்களுடன் புதிய மாடல்களை வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் Infinix Note 30 5G மற்றும் Infinix Hot 30 5G போன்கள் இரண்டும் 16 GB RAM, 256 GB நினைவகம் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற சிறந்த அம்சங்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.

இந்த போன்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக, பட்ஜெட் விலையில் அடுத்த ஃபிளாக்ஷிப் போனை அறிமுகம் செய்ய Infinix திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த போன் ஸ்மார்ட்போன் சந்தையை ஆச்சரியப்படுத்தும் வகையில் சைபர் மெக்கா வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, இது போனின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இப்போது, இந்த மொபைலின் முன்கூட்டிய ஆர்டர் தேதி முடிந்துவிட்டது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro விவரக்குறிப்புகள்: 

இந்த Infinix ஃபோன் 6.78 Full HD Plus (FHD+) AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் 1300 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது.

Infinix GT 10 Pro சிப்செட்

ஆண்ட்ராய்டு 13 OS மற்றும் XOS 13 உடன் MediaTek Dimensity 8050 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த Infinix GT 10 Pro ஃபோன் 108MP பிரதான கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 8MP மேக்ரோ லென்ஸ் உடன் டிரிபிள் லேயர் பேக் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Infinix GT 10 Pro கேமரா

32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என 2 வகைகளில் கிடைக்கிறது. இதில் விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. 1 TB வரை SD கார்டு ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது.

Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro பேட்டரி 

இந்த பேட்டரி 160W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 260W ஃபாஸ்ட் சார்ஜிங் என 2 வகைகளில் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் 6 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இந்த Infinix GT 10 Pro போன் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

இந்நிலையில், பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் என்றும், ஆகஸ்ட் 3ம் தேதி முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முன்கூட்டிய ஆர்டர் மூலம் ஆர்டர் செய்யும் முதல் 5,000 பேருக்கு ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிட்டில் யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிக்கர்ஸ், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ்ஸ் மற்றும் கார்பன் பாக்ஸ் ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி ரூ.2,000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

Infinix GT 10 Pro போன் பட்ஜெட் விலையில்

Infinix GT 10 Pro விலை

மேலும், நோ காஸ்ட் இஎம்ஐ 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அம்சங்கள் மற்றும் சலுகைகள் உள்ள இந்த போனின் விலை ரூ.20,000 ஆக இருக்கும் என தெரிகிறது. Cyber Mecha வடிவமைப்பு கொண்ட போன் இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் வெளிவருவது இதுவே முதல் முறை.

இந்த வாரத்திற்குள் இந்த போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்கள் வெளியிடப்படும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளுக்கு எங்கள் (டெக் வாய்ஸ் தமிழ்) சேனலைத் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال